“2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது .
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்டத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் அறிவியல் பூர்வமான பயிற்சியை வழங்கும் கோடைகாலப் பயிற்சி முகாமானது நடத்தப்படுகின்றது.
இதனடிப்படையில் “2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த கோடைக்கால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.
கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் இரண்டு அமர்வுகளாக பயிற்சிகள் வழங்கப்படும்.இப்பயிற்சி முகாமில், குத்துச்சண்டை, டென்னிஸ், வளைகோல்பந்து, யோகா, தடகளம், கபாடி, கையுந்துபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.
கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கோடைக்கால பயிற்சி முகாமில் சேர விரும்புவோர் தங்களது பெயர்களை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply